business

img

மாட்டு வண்டியில் ஏறிய வாஜ்பாய்; வைரலான பழைய வீடியோ... பெட்ரோல் விலை 7 பைசா உயர்வுக்கே தாவிக் குதிப்பு....

கொச்சி:
மோடி அரசு நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்துகிறது. பெட்ரோல் விலை ரூ. 100-க்குமேல் உயர்ந்துள்ளது. சில இடங்களில் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன.இதற்கிடையில், முன்னாள் பிரதமரும் பாஜக தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் பெட் ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.1973-ஆம் ஆண்டில், அப்போதைய இந்திரா காந்தி அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 காசுகள் உயர்த்தியது. இதற்குஎதிராக அப்போதைய ஜனசங்கதலைவராக இருந்த வாஜ்பாய் மாட்டு வண்டி போராட்டம் ஒன்றை நடத்தினார்.  போராட்டத்தின் ஒரு பகுதியாக வாஜ்பாய் மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந் தார். இந்த வீடியோதான் தற்போதுசமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 7 காசுகள் உயர் வுக்கே மாட்டுவண்டியில் சென்று போராட்டம் நடத்துவது என்றால், தற்போது அந்த வாஜ்பாயின் கட்சி நடத்தும் ஆட்சியில் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல்102 ரூபாய்க்கும் சென்றுவிட்ட நிலையில், மக்களெல்லாம் எந்த வண்டியில் சென்று நாடாளுமன்றம் முன்பு போராடுவது? என்றுசமூகவலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

;